Suganthini Ratnam / 2011 மார்ச் 06 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி,கர்ணன்)
யாழ். மாதகல் கரையோரப்பகுதி மக்கள் இன்று முதல் மீளக்குடியேறுவதற்கான அனுமதி மாதகல் கடற்படையினரால் வழங்கப்பட்டுள்ளது.
மாதகல் கடற்படையினருக்கும் மாதகல் கத்தோலிக்க பங்குத்தந்தை ஆனந்தகுமாருக்கும் மாதகல் கரையோர பிரதேச மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றபோதே இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வழங்கிய அனுமதியை அடுத்தே, மாதகல் கரையோரப் பகுதி மக்கள் மீளக்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதென்று இச்சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாதகல் கரையோரப்பகுதிகளிலுள்ள வீட்டு வளாகங்களில் தங்கியிருந்த கடற்படையினர் இன்று முதல் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.
யுத்தம் காரணமாக இப்பகுதி மக்கள் 17 வருடங்களுக்கு முன்னர் தமது சொந்த இடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
56 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
21 Dec 2025