2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'1976ஆம் ஆண்டுக்கு முன் யாழில் சுதந்திர கட்சி இருந்த நிலைக்கு மீண்டும் வர வேண்டும்'

Super User   / 2011 ஜூலை 03 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ் மாவட்டத்தில் 1976ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி எந்த நிலையில் வட மாகாணத்தில் இருந்ததோ அந்த நிலை மீண்டும் ஏற்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக இருந்த மறைந்த அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயராகவும் இருந்தார்.அந்த நிலமை யாழ்ப்பாணத்தில் மீண்டும் ஏற்பட வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்டக்கிளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் யாழ்ப்பாணம் கோவில் விதியிலுள்ள 80ஆம் இலக்க இல்லத்தில் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கிளை காரியாலயத்தை திறந்துவைத்த அமைச்சர் சுசில்பிரேமஜயந்த தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கொப்பேகடுவவுக்கு ஐக்கிய தேசிய  கட்சியை விட கூடிய வாக்குகளை  யாழ். குடாநாட்டு மக்கள் அன்று அளித்து இருந்தார்கள். இது மறக்கக் கூடிய ஒரு விடயமல்ல.

அன்று ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு யாழ் குடாநாட்டு மக்கள் வழங்கிய ஆதரவை மீண்டும் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஜனாதிபதி இன்று யாழ் குடாநாட்டிற்;கு கல்வியலாளர்கள் இளைஞர்களை கட்சியில் நியமித்துள்ளார்.

இந்நாட்டில் வாழும் தமிழ், சிங்கள, முஸ்ஸிம் மற்றும் பறங்கியர்கள் என பல இனத்தவர்களும் கடந்த 30 ஆண்டுகளாக பெரும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் உள்ளாகி வந்தார்கள். இந்நிலையில் எமது ஜனாதிபதி மாற்றத்தைக் கொண்டு வந்து ஒரு அமைதியான சூழலை இன்று ஏற்படுத்தியுள்ளார்.

இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இன்று நல்லதொரு காலம் பிறந்துள்ளது. எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள 19 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கு வாக்களிக்க  மக்கள் தயாராகிக் கொண்டு வருகின்றாhகள்
ஐனநாயக உரிமையை பயன்படுத்தி மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்கள். இந்த நாட்டில் கடந்த காலத்தில் ஐனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு இருந்தது.இன்று இந் நிலமை மாறியுள்ளது.

இந்த நாட்டில் வாழும் மக்கள் எந்த இடத்திற்க்கும் செல்லலாம் எந்த இடத்திலும் வியாபாரம் செய்யலாம் என்ற நிலமையே தற்போது காணப்படுகின்றது. கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் பல நாடுகள் முன்னேற்றம் அடைந்துள்ளன. ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரையில் கடந்த காலத்தில் இத்தகைய அபிவிருத்தி நிலைமை காணப்படவில்லை.

 கடந்த பல வருடங்களின் முன்னர் யாழ்ப்பாணத்தையும் தெற்கையும் இனைக்க யாழ் தேவி புகையிரதம் ஓடியது இன்று அது இல்லை. இன்று ஓமந்தை வரை இந்த புகையிரத சேவை தற்போது இடம் பெறுகின்றது. அதனை நாம் இன்னும் ஒன்று ஒன்றரை வருடங்களில் மீண்டும் யாழ்ப்பாணம் செல்லக் கூடியதாக ஆரம்பித்து வைப்போம்.

சங்குப்பிட்டிப் பாலம் போடப்பட்டதன் மூலம் ஏ 32 பாதை மக்கள் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள வீதிகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் காணப்பட்டன. இன்று இந்த வீதிகள் எல்லாம் காப்பெற் வீதிகளாக மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு  வருகின்றன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்க வேண்டிய வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கொழும்பு வைத்தியசாலை எத்தகைய வசதிகளைக் கொண்டு இருக்கின்றதோ அந்தளவு வசதிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும் இன்று வழங்கப்பட்டுள்ளது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X