2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

2 வைத்தியர்கள் வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்

Editorial   / 2023 ஜூன் 20 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள வைத்தியர்கள் இருவரின் வீடுகளின் மீது,  திங்கட்கிழமை (19) இரவு 10.30 மணியளவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவங்களில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுவதாகத் தெரிவித்தனர்.

காணி பிணக்கு ஒன்றை வைத்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக ஆரம்பக் விசாரணைகளில் தெரிய வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X