2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

20 வர்த்தகர்களுக்கு தண்டம் விதிப்பு

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

யாழ். மாவட்டத்திலுள்ள 20 வர்த்தகர்களுக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றங்களால் ஒரு இலட்சத்து 10,500 ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பாவணையாளர் அதிகார சபையினர் வியாழக்கிழமை (21) தெரிவித்தனர்.

யாழ். மாவட்ட பாவணையாளர் அதிகார சபை அதிகாரிகள் கடந்த 20 தினங்களாக யாழ். மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நிறை குறைந்த பாண் விற்றமை, காலாவதியான பொருட்களை விற்பனை செய்தமை, பொருட்களின் விலைகளைக் காட்சிப்படுத்தாமை மற்றும் அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்தமை ஆகிய குற்றங்களை மேற்கொண்ட 20 வர்த்தகர்களுக்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டன.

இதன்போதே, நீதிமன்றங்கள் மேற்படி தொகையை தண்டமாக அறவிட்டன என சபையினர் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .