2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

20 வருடங்களாக தீவகப் பகுதியில் மூடப்பட்டிருந்த இரு பாதைகள் திறப்பு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(தாஸ்,சரண்யா)

20 வருடங்களுக்கு மேலாக தீவகப் பகுதியில் மூடப்பட்டிருந்த பாதைகள் இரண்டு வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாணக் கடற்படைக் கட்டளைத் தளபதி எஸ்.எம்.பி.வீரசேகரா ஆகியோரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டன.

தீவகம், வேலணை மத்திய கல்லூரிக்குச் செல்லும் பிரதான பாதையும் மண்டதீவு பிரதான பாதையுமே இவ்வாறு திறந்துவைக்கப்பட்டவையாகும்.

இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, இவ் வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்காக வடக்கு மாகாண நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X