2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேறிய குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சி உபகரணங்கள்

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 03 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

மனித நேய அமைப்புக்களின் கூட்டமைப்பினால் நாளை 4ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு வன்னியில் இருந்து வந்து உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் மீளக்குடியேறியுள்ள முப்பது குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிக்கான  உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன.

உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.உதயகுமார் யசோதரா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.இமெல்டா சுகுமார் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பொருட்கள் உபகரணங்களை வழங்கவுள்ளார்.

பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு தொழில் முயற்சிகளுக்குமான உபகரணங்கள் இந்நிகழ்வில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X