2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமாகாணத்து விவசாயிகளுக்கு இம்முறை பல்வேறு சலுகைகள்

Super User   / 2010 ஒக்டோபர் 03 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாலமதி)

வடமாகாணத்தில் இவ்வருடம்  விடுவிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பரப்பில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளவுள்ள விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை விவசாய அமைச்சு மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ரி. பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் 22 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவசமாக விதைநெல் வழங்கப்படவுள்ளது. அத்துடன் பயிர்ச்செய்கை மேற்கொள்ளவுள்ள நிலத்தைப் பண்படுத்த 2 ஏக்கருக்கு 4 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வடமாகாணத்தில் இம்முறை 2 லட்சத்தி 47 ஆயிரத்தி 767 ஏக்கர் நிலத்தில் பயிர்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது- என்று அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X