2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஆடு திருட முயன்று கிணற்றில் விழுந்த திருடர்கள்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவம்)

ஆட்டைத் திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்ற திருடர்களை, பொது மக்கள் கலைத்ததைத் தொடர்ந்து ஆட்டை விட்டு தப்பி ஓடிய திருடர்கள் கிணற்றில் வீழ்ந்து பொது மக்களினால் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு அரியாலை நெடுக்குளம் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, வீட்டாருக்கு தெரியாது இரவு நேரம் ஆட்டை திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்ற போது ஆடு சத்தமிட்டது. அதைத் தொடர்ந்து விட்டு உரிமையாளர் எழுந்து சத்தமிட்டுள்ளார்.

இதனால் திருடர்கள் தப்பினால் போதும் என்ற நிலையில் அவர்கள் ஆட்டை கைவிட்டு வளிவுகளினால் தப்பி ஓடினர். அப்போது குறுக்கிலிருந்த கிணற்றை கவனிக்காது ஓடிய வேளையில் கிணற்றில் தவறி வீழ்ந்துள்ளனர்.

அதையடுத்து மக்கள் திருடர்களை பிடித்து  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்ததைத்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X