2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறைப் பொலிஸாரின் நடமாடும் சேவைகள்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

பருத்தித்துறைப் பொலிஸாரின் நடமாடும் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சக்கோட்டை,  அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்கத் தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெறவுள்ளன.

பருத்தித்துறைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.எல். லலித்புசல்லா தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் தேசிய அடையாள அட்டைகள் பெறுவதற்கான வழிமுறைகள், ஆலோசனைகள், சிறுபுகார்கள் குறித்த விசாரணைகள், பொது வைத்தியப் பரிசோதனை, இரத்ததானம், கண்பரிசோதனை போன்ற சேவைகள் இடம்பெறவுள்ளன.

பொது அமைப்புகளின் அனுசரணையுடன் நடைபெறவுள்ள இந்த நடமாடும் சேவையில் பொதுமக்களைக் கலந்துகொண்டு சேவையைப் பெற்றுக்கொள்ளுமாறு பருத்தித்துறைப் பொலிஸார் அறிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X