2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக மதுபானம் வைத்திருந்த நபருக்கு ஒருலட்சம் ரூபா அபராதம்

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

பருத்தித்துறையில் சட்டவிரோதமாக மதுபானங்களைப் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நபருக்கு பருத்தித்துறை நீதிமன்றம் ஒருலட்சம் ரூபா அபராதம் விதித்தது.

பருத்தித்துறை முதலாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் 26 போத்தல் மதுபானங்களைச் சட்டவிரோதமாகப் பதுக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவரை நேற்று முன்தினம் பருத்தித்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷந்த தலைமையிலான குழுவினர் கைதுசெய்து அவர்மீது வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நேற்று பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதி திருமதி ஜோய் மகாதேவா தலைமையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது குறித்த சந்தேக நபரக்கு ஒருலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X