Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 13 , மு.ப. 09:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(நவம்)
தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி நாளை 14ஆம் திகதி காலை மாலையென இரண்டு நேர நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. காலை அமர்வுகள் அதிபர் திருமதி. சிவமலர் அனந்தசயனன் தலைமையில் பாவலர் துரையப்பா மண்டபத்தில் இடம்பெறவுள்ளன.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கருனைபாலம் நிறுவன செயலாளர் ஆ.சி.நடராசா கலந்து கொள்ளவுள்ளார். மாலை நிகழ்வுகள் கல்லூரி திறந்த வெளியில் பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி நடைபெறவுள்ளன. முதன்மை விருந்தினராக கல்லூரியின் லண்டன் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் நா.சிறிதரன் கலந்து கொள்வதுடன் சிறப்பு விருந்தினராக வலிகாமம் கல்வி வலய உடற்க்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் மகாஜனன் மு.நடராசாவும் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
அத்துடன், சின்னப்பா நினைவு நூலகம் திறந்து வைக்கப்படுவதுடன் நூற்றாண்டு விழாவையொட்டிய கரப்பந்தாட்டம் பெண்கள் உதைபந்தாட்டம் மற்றும் கிரிக்கெட் போட்டிகளும் இடம்பெறவுள்ளன. மேலும், 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்திய 06 பேர் பங்கு பற்றும் கிரிக்கெட் போட்டி ஆட்டத்தில் மூன்றாம் இடத்திற்கு வட்டுக்கொட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும், யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியும் மோதவுள்ளன.
இறுதிப் போட்டியில் கொக்குவில் இந்துக் கல்லூரியும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியும் மோதவுள்ளன.
பெண்களுக்கான கரப்பந்தாட்ட மூன்றாம் இடத்திற்க்கான போட்டியில் மானிப்பாய் மகளிர் கல்லூரியும் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயமும் இறுதிப் போட்டியில் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லாரியும் மோதவுள்ளன.
உதைபந்தாட்டப் போட்டியில் காலை 8.30க்கு நடைபெறும் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரியும் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமும் மோதவுள்ளன.
மாலை மின்னொளியில் நடைபெறவுள்ள உதைபந்தாட்டப் போட்டியில் மூன்றாம் இடத்திற்;கான போட்டியில் தோல்வி அடையும் அணி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியுடனும் இறுதிப் போட்டியில் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியுடன் இடம்பெறும் போட்டியில் வெற்றி பெறும் அணியும் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago