Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களின் நலனையும் வளமான வாழ்வையும் கருத்தில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்த்திரி அலென்டின் உதயன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (14) நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மக்களின் நலன்களை மேம்படுத்துவதும் அவர்களுக்கான வளமான சுபீட்சமான வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதுமே எமக்கு முன்னுள்ள பாரிய கடமைப்பாடாகும்.
இந்த நிலையில் பொறுப்புகளிலுள்ள அரச உத்தியோகத்தர்கள் மக்களுக்கான கடமைகளை பொறுப்புணர்வுடன் செய்வது மட்டுமல்லாமல் உண்மையுடனும் நேர்மையுடனும் ஆற்ற வேண்டும்.
மக்களை எப்போதும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் தங்கியிராது தமது சொந்தக் கால்களில் நிற்பதற்கு ஏற்ப அவர்களுக்கு வேண்டிய அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கி அவர்களை வலுப்படுத்த வேண்டிய கடமையும் அரச அதிகாரிகளுக்கே உண்டு.
இது இன்றைய காலத்தின் கட்டாய தேவை என்பதுடன் அதிகாரிகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் போதுதான் இவை எல்லாம் சாத்தியமாகும் என்றும் சில்வேஸ்த்திரி அலென்ரின் உதயன் அவர்கள் மேலும் தெரிவித்தார்.
இக்கூடத்தில் பிரதேச செயலர் அரச உத்தியோகத்தர்கள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் துறைசார்ந்தோர் மக்கள் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago