2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கரவெட்டியில் சிறுவர்தின நிகழ்வுகள்

Super User   / 2010 ஒக்டோபர் 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கர்ணன்)

கரவெட்டிப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர்தின நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலர் எஸ். சத்தியசீலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்குப் பிரதமவிருந்தினராக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் கலந்துகொள்ளவுள்ளார். சிறப்பு விருந்தினர்களாக வடமராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் வ. செல்வராஜா, சிறுவர் பாதுகாப்புத் திட்ட முகாமையாளர் கே.மகேந்திரன் ஆகியயோர் கலந்துகொள்வர்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X