Super User / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாலமதி)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை நிராகரித்து வடக்கு மாகாணத்தில் அரசாங்கத்தால் எந்த அபிவிருத்தியும் மேற்கொள்ள முடியாது என்பதை உணரும் காலம் வெகு விரைவில் வரும். அப்போது எம்மையும் இவ்வாறான நிகழ்வுகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் க.சிறிதரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நாளை இடம்பெறவுள்ள வடமாகாண அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கூட்டத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைக்கு அழைப்பு விடுக்காமை தொடர்பாகக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்த அரசாங்கம் தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வையும் வழங்காது இழுத்தடித்து வருகின்ற நிலையில் இவ்வாறாக கூட்டங்களுக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்தால் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து அங்கு குரல் எழுப்புவோம் என்ற காரணத்தாலும் எமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை- என்றார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago