2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கூட்டுறவுத்துறையில் புதிய அங்கத்தவர்களை இணைக்க முடிவு

Super User   / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சரண்யா)

யாழ்.மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக புதிய அங்கத்தவர்களை உள்வாங்கத் தவறியமையாலேயே கூட்டுறவுத்துறை வீழ்ச்சியைச் சந்திப்பதற்குக் காரணம். எனவே, இவ்வருட இறுதிக்குள் கூட்டுறவுத்துறையை மீள் எழுச்சி கொள்ள வைப்பதற்காக புதிய அங்கத்தவர்கள் இணைக்கப்படவுள்ளனர் - இவ்வாறு யாழ்.மாவட்ட கூட்டுறவுத்துறை உதவி ஆணையாளர் வீ.கே.அருந்தவநாதன் தெரிவித்துள்ளார்.
 
இது பற்றி அவர் மேலும் தெரிவித்தமை வருமாறு:

பல அங்கத்தவர்கள் தமது அங்கத்துவப் பங்குப்பணமான 100 ரூபாவை இன்னும் கட்டி முடிக்கவில்லை. இதனால் அவர்கள் முழு அங்கத்தவர்கள் பெறுகின்ற பலாபலன்களை அடையமுடிவதில்லை.அத்துடன் கூட்டுறவு சார்ந்த செயற்பாடுகளிலும் அவர்கள் முழுமையாக ஈடுபடாமல ஒதுங்கியே இருக்கின்றனர்.இந்நிலை மாற வேண்டும்.

இளைய சமூகத்தினரும் கூட்டுறவுத்துறைக்குள் வரவேண்டும். இதற்காக புதிய அங்கத்தவர்களை உள்வாங்கமுடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இவ்வருட இறுதிக்குள் தத்தம் பிரதேசங்களில் உள்ள கூட்டுறவு அமைப்புகளில் புதிய அங்கத்தவர்களாச் சேர விரும்புவோர் இணைந்து கொள்ளமுடியும். அத்துடன் 100 ரூபா பங்குப் பணத்தைச் செலுத்தி முடிக்காதவர்களும் உடனே செலுத்தி முழு அங்கத்தவர்களாக இணைய முன்வரவேண்டும்.

இதனூடாக யாழ்.மாவட்டத்தில் இவ்வருட இறுதிக்குள் கூட்டுறவுத்துறையை மீள் எழுச்சி கொள்ளவைக்க முடியும் -என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X