Super User / 2010 ஒக்டோபர் 17 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(என். பரமேஸ்வரன், பாலமதி)
யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள மக்களுக்கு உலர் உணவு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக மீள்குடியேற்ற அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று காலை விஜயம் செய்த அமைச்சர் யாழ். புகையிரத நிலையத்தில் தங்கியுள்ள சிங்கள குடும்பங்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்தார்.
இதன் போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அங்குள்ள மக்கள் இங்கு குடியிருந்தமைக்கான காணிகளின் உறுதிகள் பெறப்பட்டு அதுதொடர்பான பரீசீலனை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இங்குள்ள அரச காணிகளை இனங்கண்டு அவற்றில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அந்த மக்களுக்கு உறுதியளித்துள்ளார் என்று கூறப்பட்டது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago