Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 25 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்,நவம் )
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 'கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு' சாட்சியம் அளிப்பதில்லையென்று தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் இலக்கம் 433ஆம் குறுக்குத்தெரு அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனைக் குறிப்பிட்டது.
இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டில் முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர்களான கயேந்திரகுமார் பொன்னம்பலம், கயேந்திரன், திருமதி பத்மினி சிதம்பரநாதன் மற்றும் முன்னாள் வேட்பாளர்களான வரதராஜன், திருலோகமூர்த்தி
ஆகியோர் கலந்துகொண்டனர்.
அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கை
அரசாங்கம் கடந்த 60 வருடகாலமாக தமிழ் தேசத்தின் மீது திட்டமிட்ட இனப்படுகொலையை மேற்கொண்டு வந்தது. இதன் உச்சக்கட்டமாக மஹிந்த அரசாங்கம் ஆயுதப் போராட்டத்தை அழிப்பதற்காக இந்த இன அழிப்பு நடவடிக்கையை 2009 மே மாதத்தில் மேற்கொண்டது. இந்த இன அழிப்பு சர்வதேச சமூகம் தனது கவனத்தை திசை திருப்பியுள்ளது.
இதனாலே போர்க்குற்ற விசாரணையை, பல சர்வதேச நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சுயாதீனமாக நடத்தவேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், இதிலிருந்து தப்புவதற்காக இலங்கை ஜனாதிபதியினால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நியமிக்கப்பட்டு சாட்சியங்களைத் திரட்டி வருகின்றன. இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த இனப்படுகொலை, எவ்வாறு சாட்சியங்களைப் பெற முடியும். இந்தச் சாட்சியங்களுக்கு பாதுகாப்பான சூழல் இல்லை. இன்னமும் கடத்தல்கள், கொலைகள், கொலை மிரட்டல்கள் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இந்த ஆணைக்குழுவை நியமிப்பதன் மூலம் இனப்படுகொலை அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக் குழுக்கள் ஏற்படுத்தப்படுவதனை தடுப்பதற்கே ஆகும்.
மேலும் இலங்கை அரசாங்கத்தினால் திட்டமிட்டு 60 வருடகாலமாக இன அழிப்புத் தொடர்பான ஆவணமொன்றை எமது முன்னணி தயாரித்து சர்வதேசத்திற்கு வழங்கவுள்ளதுடன், அதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை மேற்கொண்டுள்ளதாக அம்முன்னணி தெரிவித்துள்ளது.
.jpg)
29 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago
3 hours ago