2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்க நடவடிக்கை

Super User   / 2010 நவம்பர் 06 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டெனியல்)

நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளின் முன்னாலுள்ள சுற்றுச் சூழலை நோய் பரவாது தடுப்பதற்காக சுத்தமாக வைத்திருக்க வழி செய்யுமாறு நல்லூர் பிரதேச செயலாளர் தெரிவித்தார்.

தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதனால்  சுற்றுப்புறச் சூழலைச் சுத்தமாக வைத்திருக்காவிடின் நுளம்புப் பெருக்கம் மற்றும் தொற்றுநோய்கள் ஏற்படுவதைத்தடுக்க முடியாது.

எனவே வீட்டு  உரிமையாளர்கள் இதற்கு முன்னுரிமை கொடுத்து தமது சூழலை சுத்தமாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்யாதுவிடின் ஏனைய இடங்களில் நடவடிக்கை எடுத்ததைப் போன்று எமது பிரதேச செயலர் பிரிவிலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நல்லூர் பிரதேச செயலர் மேலும் தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X