2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமாகாணக் கல்வி மேம்பாட்டுக்குத் துரித நடவடிக்கை

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 09 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹேமந்த்)

வடமாகாணத்தில் கல்வி மேம்பாட்டைத் துரிதப்படுத்தும் நோக்கில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடமாகாணப் பாடசாலைகளின் கல்வி நிலையை விருத்தி செய்யும் நோக்கில் கோட்ட ரீதியாகவும் வலய ரீதியாகவும் பாடசாலை ரீதியாகவும் திட்டங்களை மேற்கொள்ளும் விதமாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் முதற்கட்டமாக, கோட்டக்கல்விப் பணிப்பாளர்களுக்கான கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,  மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் மற்றும் மாகாணக் கல்வி அமைச்சின் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.


வவுனியா கல்வி வலய மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளும் அந்தப் பணிமனைகளின் பொறுப்புகளும் மேலதிக நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் பற்றியும் ஆளுநரினால் எடுத்துரைக்கப்பட்டது.  இதன்படி அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கோட்டக்கல்விப் பணிமனைகள் விரைவில் செயற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதேவேளை, நாளையும நாளை மறுதினமும் வடமாகாணத்தின் கல்வி தொடர்பான கூட்டங்கள் தொடர்ந்து ஏனைய தரப்பு உத்தியோகத்தர்களுடன் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X