2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். முற்றவெளியிலிருந்து தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 28 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு பஸ் சேவைகளை நடத்தி வரும் சகல தனியார் பஸ்களும் முற்றவெளி தரிப்பிடத்திலிருந்தே செல்ல வேண்டுமென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார்.

தனியார் போக்குவரத்து பஸ் உரிமையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டதற்கு அமைவாக இவ் ஒழுங்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

பகலிலும் சரி இரவிலும் சரி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, கொழும்பு, கண்டி, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கான சேவையை நடத்தும் தனியார் பஸ்கள் முற்றவெளியில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.

அண்மைக்காலமாக இப்பஸ்கள் யாழ்ப்பாணம் மின்சார நிலைய வீதி, ஆஸ்பத்திரி வீதியில் தரித்து நின்று பயணிகளை ஏற்றிவருவதால் போக்குவரத்து நெருக்கடி நிலையேற்பட்டு வருகிறது.

வெளிமாவட்ட தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றும் செயல்பாட்டை போக்குவரத்துப் பொலிஸார் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X