2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்களுக்கு விமானப்படை தொண்டர் பயிற்சி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவர்கள் இரண்டு வார காலத்திற்கான விமானப்படை தொண்டர் பயிற்சியை மேற்கொள்வதற்;காக தியத்தலாவை விமானப்படை முகாமிற்கு சென்றுள்ளனர்.

கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களுக்கு  இராணுவத் தொண்டர் படையணிக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தபோதிலும், இந்தாண்டு நீண்டகால இடைவெளியின் பின்னர் முதல் தடவையாக விமானப்படைத் தொண்டர் படையணிக்கான  பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அகில இலங்கை ரீதியில் முதல் தடவையாக விமானப்படையணிக்கான பாடசாலை மாணவர்களுக்கான பயிற்சிகள் இடம்பெறுகின்ற அதேவேளை, வடமாகாணத்திலிருந்து ஒரேயோரு பாடசாலையாக கொக்குவில் இந்துக் கல்லூரி விமானப்படைத்; தொண்டர் பயிற்சிக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X