Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி)
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று இராணுவத்தினர் பதிவை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்பப் பங்கீட்டு அட்டையைப் பார்த்து பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குடும்பத்தினரின் விபரங்களையும் இராணுவத்தினர் பதிவு செய்கின்றனர்.
இதன்போது, குடும்ப உறுப்பினர்களை அடையாளப்படுத்தும் குடும்ப அடையாள அட்டைகளையும் இராணுவத்தினர் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர்?, வெளிநாட்டில் எத்தனை பேர் வசிக்கின்றனர?, மற்றும் வாகனங்கள் உள்ளனவா? என்பது தொடர்பான கேள்விகளை மக்களிடம் கேட்டு இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், சந்தேகத்திற்கிடமான நபர்கள் வீடுகளில் தங்கியுள்ளனரா? இரவு வேளைகளில் மீதி உணவை என்ன செய்வீர்கள்? போன்ற கேள்விகளையும் இராணுவத்தினர் கேட்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இராணுவத்தினர் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றமையால் மக்கள் மத்தியில் ஒரு பதட்ட நிலை உருவாகியுள்ளமையை அவதானிக்க முடிகின்றது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago