Menaka Mookandi / 2011 பெப்ரவரி 11 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
யாழ், வலிகாமம் பகுதியில் உள்ள அனைத்துக் கிராம அலுவலர்களும் புகைப்படத்துடன் குடும்ப விபரங்களைப் பதிவு செய்ய வேண்டுமென வலிகாமம் 513ஆவது இராணுவப்பிரிவின் கட்டளைத் தளபதி கிராம அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று மாலை 3 மணியளவில் மானிப்பாய் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது குறித்து தெரிவிக்கப்பட்டது. 99 கிராம அலுவலர்களுடனான கலந்துரையாடலின் போதே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு கருதி அனைத்துக் கிராம அலுவலர்களும் தத்தமது பிரிவுகளில் உள்ள குடும்பங்களின் முழு விபரங்களையும் புகைப்படத்துடன் பதிவுகளை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை யாழ். குடாநாடு உட்பட வட பகுதிகளில் மீண்டும் மேற்கொள்ளப்பட்டுவரும் குடும்ப விபரப் பதிவுகள் நிறுத்தப்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.
39 minute ago
47 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
47 minute ago
6 hours ago
21 Dec 2025