2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சுன்னாகத்தில் மீண்டும் வெள்ளை வான் பீதி

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 11 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ், கிரிசன், கவிசுகி)

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட கந்தரோடைப் பகுதியில் வியாழக்கிழமை நள்ளிரவு வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதவர்கள் அப்பகுதியிலுள்ள வீடுகளைத் தட்டியதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி வீடுகளின் உரிமையாளர்கள் சிலர் கிராம சேவகரின் உதவியுடன் இது விடயமாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.

இனம்தெரியாதவர்கள் பயணித்ததாகத் தெரிவிக்கப்படும் மேற்படி வானின் நடமாட்டத்தினால் இரவு முழுவதும் குறித்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது. இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X