A.P.Mathan / 2011 பெப்ரவரி 12 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். நகரப் பகுதியிலும் அதனை அண்டிய ஏனைய பகுதிகளிலும் சில நாட்களாக வீட்டில் ஆண்கள் இல்லாத சமயம் அத்துமீறி நுழைந்து பெண்களிடம் பாலியல் சேஷ்ட்டை விட்டு அவர்களைத் தாக்கி வந்த குழுவினரை யாழ். பொலிஸார் அதிரடி நடவடிக்கை மூலம் நேற்று வெள்ளிக்கிழமை மடக்கி கைது செய்துள்ளனர்.
யாழ். வண்ணார்பண்ணை மற்றும் ஐந்துசந்திப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஆண்கள் வேலை நிமிர்த்தம் வெளியே செல்வதனை அவதானித்து விட்டு, வீட்டில் வேறு யாரும் இல்லை என்பதனை உறுதி செய்து பட்டப்பகலில் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலுள்ள பெண்களுக்கு பாலியல் சேஷ்ட்டை விட்டுச் செல்லும் சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன.
இது குறித்து தகவலறிந்த நகர வாசிகள், யாழ். பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். யாழ். பொலிஸ் - குற்றவாளிகளைத்தேடி வலை விரித்திருந்தது.
நேற்று மாலைவேளை லோட்டஸ் வீதி பகுதியில் தமது கைவரிசையைக் காட்டியவேளை இரு இளைஞர்களை யாழ். பொலிஸார் மடக்கிப் பிடித்தனர். மற்றைய மூவர் தப்பியோடி தலைமறைவாகியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருவதாகவும், இவர்கள் இன்று சனிக்கிழமை யாழ். நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர் எனவும் யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
31 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago