A.P.Mathan / 2011 பெப்ரவரி 13 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை திங்கட்கிழமை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை இலங்கை மின்சார சபையின் சுன்னாக மின்பொறியிலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் திங்கட்கிழமை சுன்னாகம், குப்பிளான், மயிலங்காடு, ஏழலை, காங்கேசன்துறை உயர்பாதுகாப்பு வலய பகுதி ஆகிய இடங்களிலும் மின்சார விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இந்த மின்சார விநியோக தடை, காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயரழுத்த மின்மார்க்கங்களின் பராமரிப்பு பணிகள் மற்றும் கட்டமைப்பு நடவடிக்கைகள் காரணமாகவே திங்கட்கிழமை மின்சார விநியோகம் தடைப்பட்டிருக்கும் எனவும் இலங்கை மின்சார சபையின் சுன்னாக மின்பொறியிலாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
45 minute ago
53 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
53 minute ago
6 hours ago
21 Dec 2025