Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாகப் பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சிக்கு உடன்பாடு இல்லையென்பதுடன், கூட்டாக செயற்படுவதற்கு தாங்கள் தயாராகவுள்ளதாகவும் அதன் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ.; மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டிலேயே தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இவ்வாறு கூறினர்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியிலேயே இருக்குமென்று கூறிய அவர்கள்,; தமிழரசுக் கட்சிக்கே 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும்; குறிப்பிட்டனர்.
கட்சியிடம் ஒரு மேலிடம் உள்ளது. இரா.சம்பந்தனே தமிழரசுக் கட்சியின் தலைவர். அவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளாரெனவும் அவர்கள் தெரிவித்தனர்.
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago