Suganthini Ratnam / 2011 மார்ச் 06 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கிரிசன்)
யாழ்ப்பாணம் சிவில் சமூகத்திற்கும் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் இடையிலான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
யாழ். பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குளுவின் பிராந்தியப் பொறுப்பாளர் த.கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பில், யாழ். மாவட்டத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
குறிப்பாக யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், மனித உரிமைகள் விடயத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழு கூடிய கவனம் செலுத்தவேண்டுமென இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்களினால் வலியுறுத்தப்பட்டது.
இச்சந்திப்பில் கொழும்பு ஜக்கிய நாடுகள் சபையின் திட்ட இணைப்பாளர் அனில் செனிவிரட்ன, தேசிய கருத்திட்ட இணைப்பாளர் செல்வி தனுஜா நவரத்தின உட்பட மற்றும் யாழ். பிராந்திய மனித உரிமைகள் ஆனைக்குழு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
.jpg)
52 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
21 Dec 2025