2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

ஸ்ரீ சு.சண்முகநாத குருக்களின் இறுதிக் கிரியை கீரிமலை கண்டாங்கி தீர்த்தத்தில் இடம்பெற்றது

Super User   / 2011 மார்ச் 06 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

மாவை ஆதின முதல்வரும் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய பிரதம குருவுமான மகாராஜ ஸ்ரீ சு.சண்முகநாத குருக்களின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மணியளவில் கீரிமலை கண்டாங்கி தீர்த்தத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அமை;சசர் டக்ளஸ் தேவானந்தா, யாழ் மாநகர மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துனைவேந்தர் சண்முகலிங்கன் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்த சங்கரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாலை 6.15 மணியளவில் அன்னாரின்  உடல் தீயுடன் கண்டாங்கி திர்த்தக்கரையில் சங்கமாகியது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X