2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மீசாலையில் தாயும் மகனும் வெள்ளை வானில் கடத்தல்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 07 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

யாழ். மீசாலை கிழக்கு பகுதியில் தாயும் மகனும் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

யாழ். மீசாலை கிழக்கு பகுதியில் தாயொருவரும் அவளுடைய மகனொருவரும் வெள்ளை வானில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 38 வயதான பெண் தனது கணவனைப் பிரிந்து மீசாலை கிழக்கில் உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார்.  அவர்களது வீட்டுக்கு நேற்றையதினம் வேறு ஆட்களுடன் வெள்ளை வானில்; வந்த அப்பெண்ணின் கணவர் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார.;

அவ்வேளையில் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிடவே வாகனத்தில் வந்தவர்கள் மகனையும் தாயையும் இழுத்துச்சென்று வானில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து தப்பியதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

அயலவர்களின் தகவலையடுத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸாரும் படையினரும், சாவகச்சேரிப்பகுதியில் குறித்த வானை மடக்கிப் பிடித்து வானில் இருந்த தந்தையும் சாரதியும் வேறொரு பெண்ணும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் .

இச்சம்பவம் தெடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X