Suganthini Ratnam / 2011 மார்ச் 07 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இளவாளை பெரியவிளான் கிராமத்தின் குறைபாடுகளை தீர்ப்பதற்கு எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என ஈ.பி.டி.பி.யின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பெரியவிளான் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இக்கிராமம் மீள் எழுச்சி திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் இடம்பெற்று வருகிறது. இதற்கப்பால் இக்கிராமத்திலுள்ள ஏனைய தேவைகளும் எம்மால் இயன்றவரை ஏதேனும் திட்டங்களின் ஊடாக பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் நிச்சயம் மேற்கொள்ளப்படும். வன்னியிலிருந்து வந்து மீள்குடியேறியுள்ளவர்களை பெருமளவில் கொண்டுள்ள இக்கிராமம் விசேடமாக கவனிக்கப்படும். அத்துடன், விரைவில் பிரதேச செயலாளர், கிராம அலுவலர் மற்றும் வீட்டுத்திட்ட அதிகாரிகள் உட்பட பல அதிகாரிகள் சகிதம் இக்கிராமத்திற்கு வருகை தந்து மக்களின் தேவைகள் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளைப் பெற்றுத் தருவோம்.
மக்களின் தேவைகள் பிரச்சினைகளை கேட்டறியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் மானிப்பாய் பிரதேச ஈ.பி.டி.பி.யின் அமைப்பாளர் ஜீவா, ஈ.பி.டி.பி.யின். வலிகாம பிரதேச இணைப்பாளர் ஜீவன் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் அபிவிருத்திச் சங்கம், விளையாட்டுக் கழக பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
56 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
21 Dec 2025