2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

கடத்தப்பட்ட பெண் சடலமாக மீட்பு

Super User   / 2011 மார்ச் 07 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். மீசாலை கிழக்கு பகுதியில் நேற்று வெள்ளை வானொன்றில் கடத்தி செல்லப்பட்ட பெண், சாவகச்சேரி பெருங்குளம் காட்டுப் பகுதியில் இன்று திங்கட்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

மீசாலை கிழக்கை சேர்ந்த கணவரை விட்டு பிரிந்து, உறவினர்களுடன் வாழ்ந்து வந்த 38 வயதான பெண்ணொருவரே கொலை செய்யப்பட்டுள்ளவராவர்.

இது தொடர்பாக அவரின் கணவரை சாவகச்சேரி பகுதியில் வைத்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வானுடன் சாவகச்சேரி  பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இப்பெண்ணின் சடலத்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு சாவகச்சேரி நீதிபதி ம. கணேசலிங்கம் யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X