2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பத்திரிகை தர்மத்தை பாதுகாக்கும்படி பாதுகாப்புபடை பணிப்பு

A.P.Mathan   / 2011 மார்ச் 08 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யாழில் வெளிவருகின்ற பத்திரிகைகள் நம்பகத்தன்மையை பேணுவதோடு பத்திரிகை தர்மத்தையும் காக்க வேண்டுமென பிரிகேடியர் ரொட்றிகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் மக்கள் தொடர்பாடல் பிரிவில் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே பிரிகேடியர் ரொட்றிகோ மேற்படி வேண்டுகோளை விடுத்தார்.

யாழ்ப்பாணத்தில் வெளிவருகின்ற பிராந்திய பத்திரிகைகளான உதயன், வலம்புரி, தினக்குரல், தினமுரசு ஆகிய பத்திரிகைகளின் அங்கத்தவர்களுடனான கலந்துரையாடல் ஒன்றினை இராணுவம் நேற்றைய தினம் ஏற்பாடு செய்திருந்தது. இக்கலந்துரையாடலில் பிரிகேடியர் ரொட்றிகோ தொடர்ந்து உரையாற்றுகையில்...

'ஊடகவியலாளர்கள் செய்திகளை திரிவுபடுத்தி வெளியிடக்கூடாது. குறிப்பாக பாதுகாப்பு தரப்பினருடன் சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்ற வேளையில் பாதுகாப்பு தரப்பினரிடம் மீள்பரிசீலனை செய்து செய்திகளை வெளியிடுவது சிறந்தது. அதை விடுத்து திரிவுபடுத்திய செய்திகளை வெளியிடாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இராணுவம் செய்திகளை வெளியிடுவதற்கு தடையாக இருக்காது. ஊடகவியலாளர்களுக்கான பூரண சுதந்திரத்தினை இராணுவம் வழங்கும். ஆபத்தான வேளையில் உதவி புரிவதற்கு இராணுவம் எப்பொழுதும் தயாராகவே இருக்கும். ஆகையினால் ஊடகவியலாளர்கள் பயமின்றி பணியாற்ற முடியும்...' என்று மேலும் தெரிவித்தார் பிரிகேடியர் ரொட்றிகோ.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X