2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

நல்லூர் ஆலய சூழலில் திடீர் சுகாதார பரிசோதனை

Menaka Mookandi   / 2011 மார்ச் 10 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். நல்லூர் ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள பல்பொருள் கடைகள் மாநகர முதல்வரின் பணிப்புரைக்கமைய திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதன்போது காலாவதியான பல பொருட்கள் மீட்கப்பட்டு அழிக்கப்பட்டன.

நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்தச் சோதனை நடவடிக்கையின்போது கடைகளிலிருந்து மென்பான வகைகள், பிஸ்கட் வகைகள், பழரச வகைகள், மருந்துப்பொருட்கள் எனப் பல பொருட்கள் மீட்கப்பட்டன.

1.5 லீற்றர் கொண்ட மென்பானப் போத்தல்கள் ஏனைய கொள்ளளவுள்ள மென்பானப் போத்தல்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் என்பன இதில் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X