2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வடமாகாண சுதேச மருத்துவ சபையில் மாணவர்கள் இணைப்பதை நிறுத்த அறிவிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 13 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண சுதேச மருத்துவ சபையினால் வருடாந்தம் மாணவர்களை பயிற்சிக்காக இணைக்கும் நடவடிக்கையை நிறுத்தும்படி வடமாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 85 வருடங்களாக ஆயுள்வேத வைத்தியத்திற்கு மாணவர்களை இணைத்து கல்வி கற்பித்து வரும் இந்நிலையத்திற்கு தற்போது வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சினால் இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபை உருவாக்கப்பட்ட காலம் முதல் வடமாகாண சுகாதரா சேவைகள் திணைக்களத்தின் கீழ் செயல்பட்டாலும் கூட, மாணவர்களை அனுமதிக்கும் செயல்பாட்டில் இந்நிறுவனம் தானே மாணவர்களை தெரிவு செய்து வந்தது. இந்நிலையில் இந்தாண்டு திடீரென மாணவர்களை தெரிவு செய்ய வேண்டாமெனவும் தாம் எதிர்காலத்தில மாணவர்களை தெரிவு செய்து வழங்குவதாகவும் இதனை மீறும் சந்தர்ப்பத்தில் கல்லூரிக்கான உதவிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படுமெனவும் வடமாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை அமைச்சின் செயலாளரினால் கல்லூரியின் பணிப்பாளர் சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையிட்டு பணிப்பாளர் சபை அடுத்த கட்ட நடவடிக்கை சம்பந்தமாக தமது உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருகின்றனர்.       


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X