Suganthini Ratnam / 2011 மார்ச் 13 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ். மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகள் மாணவர்களுக்கான மதியநேர உணவை வழங்குவதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளன.
கடந்த பல வருடங்களாக யாழ். மாவட்ட பாடசாலைகளில் தரம் பத்து வரையான மாணவர்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் மதியநேர உணவு வழங்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் உலக உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அரிசி முடிவடைந்துள்ளமையால் பல பாடசாலைகள் நாளை திங்கட்கிழமை முதல் மதியநேர உணவு வழங்க முடியாத நிலைமைக்குள்ளாகியுள்ளன.
இதனால் ஆரம்பப் பிரிவு பாடசாலைகளினுடைய அதிபர்கள் நாளை திங்கட்கிழமை முதல் மதியநேர உணவை வீட்டிலிருந்து கொண்டுவருமாறு மாணவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
கிராமப்புறப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் பாடசாலையில் வழங்கப்படும் மதியநேர உணவை நம்பியுள்ளனர். இந்நிலையில், எந்தவித முன்னறிவித்தலுமின்றி பாடசாலைகள் மதியநேர உணவு வழங்குவதை நிறுத்தியுள்ளன. மதியநேர உணவை நிறுத்தியமையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதிப்படையும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை உலக உணவுத் திட்டத்தின் கீழ் தொடர்புடைய அதிகாரிகள் இது சம்பந்தமாக கருத்துத் தெரிவிக்கையில், கையிலிருப்பிலிருந்த அரிசி முடிவடைந்துள்ளது. அரிசி வந்ததும் வழங்கப்படும் என்றனர்.
4 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
21 Dec 2025