2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழில் வாழை இளைய வளர்ப்பு செயற்றிட்டம்

Super User   / 2011 மார்ச் 13 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தோடு இணைந்து கொழும்பு பல்கலைக்கழகம் யாழ். மாவட்டத்தில் வாழை  இளைய வளர்ப்பு செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக உப வேந்தர் ஷனிக்கா ஹிரிம்புறேகம- தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இச்செயற்றிட்டம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விவசாய திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

வாழை இளைய விருத்தி செயற்றிட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டபோது அதிக விவசாயிகள் இணைந்துகொண்டதாக ஷனிக்கா ஹிரிம்புறேகம கூறினார்.

ஹம்பாந்தோட்டை, பெலிகத்த பிரதேசத்தில் அமைந்துள்ள கொழும்பு பல்கலைக்கழகத்தின் விவசாய தொழில்நுட்ப மற்றும் கிராமிய விஞ்ஞான நிலையத்தின் ஊடாக குறித்த செயற்றிட்டம் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாழை இளைய வளர்ப்பு செயற்றிட்டம் யாழ். மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விவசாய தொழிநுட்ப மற்றும் கிராமிய விஞ்ஞான நிலையத்தின் தென் கொரிய ஆலோசகரான பேராசிரியர் ஹிம் ஜே குவின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் குறித்த செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது அப்பிரதேச மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என ஷனிக்கா ஹிரிம்புறேகம மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X