Suganthini Ratnam / 2011 மார்ச் 14 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
வடமாகாண கடற்பரப்பில் இந்திய இழுவைப்படகுகள் அத்துமீறி உள்நுழைந்து வடகடல் வளங்களை அழிப்பதைத் தடுத்து நிறுத்துவதற்கு தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளதாக வடகடல் கடல்த்தொழிலாளர் சமாசத்தலைவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் சந்திப்பொன்று நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளில் பிரவேசிப்பதும் உள்ளூர் மீனவர்கள் கரைக்கு தப்பியோடி வருவதும் உள்ளூர் மீனவர்களின் வலைகளை இழுவைப்படகுகள் அறுத்து நாசமாக்கும் சம்பவங்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளன. இவ்வாறான செயற்பாடுகளால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான நஷ்டம் ஏற்படுவதாகவும் வடபகுதி மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மற்றும் உள்ளூர் மீனவர்களின் வலைகளை இழுவைப்படகுகள் அறுத்து நாசமாக்கும் சம்பவங்களை கண்டித்தும் எதிர்த்தும் போராட்டம் நடத்த நாடளாவிய ரீதியில் மீனவ சங்கங்கள் முயன்று வருகின்றன. இதற்காகவே நாளையதினம் கொழும்பில் கூடவுள்ளதாக வடமாகாண கடல்த்தொழிலாளர் சமாசத்தலைவர் எஸ்.தவரெட்ணம் தெரிவித்துள்ளார்.
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago