Suganthini Ratnam / 2011 மார்ச் 14 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். உடுவிலிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் மரணமான மாணவியொருவரின் சடலத்தை சுன்னாகம் பொலிஸார் மீட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சாவகச்சேரியை சேர்ந்த மனோகரன் கலைவாணி (வயது 17) என்ற மாணவியின் சடலமே பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி தாயாருடன் உடுவிலில் தங்கியிருந்து பாடசாலைக்கு சென்று வருபவர் ஆவார்.
சம்பவ தினத்தன்று தாயார் வீட்டில் இல்லாத வேளையில் இவர் மர்மமானமுறையில் சடலமாக கிடந்தார். இதனைக் கண்ட தாயார் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில், பொலிஸார் சடலத்தை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
31 minute ago
39 minute ago
6 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
39 minute ago
6 hours ago
21 Dec 2025