Super User / 2011 மார்ச் 14 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ். செல்வநாயகம்)
வடக்கில் கட்டாய பதிவுகள் நிறுத்தப்படுவதற்கான பொறுப்பை என சட்டமா அதிபர் நீதிமன்றில் ஏற்றிருந்த போதிலும் பாதுகாப்பு படையினர் தொடர்ந்தும் பதிவுகளை மேற்கொண்டுவருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று உயர் நீதிமன்றில் புகாரிட்டனர்.
யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் மேற்கொள்ளப்படும் கட்டாய பதிவுகள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கான பொறுப்பை கடந்த 3 ஆம் திகதி சட்டமா அதிபர் உயர் நீதிமன்றில் ஏற்றிருந்தார்.
இப்பதிவு நடவடிக்கைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பு எம்.பிகள் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் புவனேக அலுவிகார இந்த இதை நீதிமன்றில் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து மனுதாரரர்களான த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, ஈஸ்வரபாதம் சரவணபவன், சிவஞானம் சிறிதரன் ஆகியோர் தமது மனுவை வாபஸ் பெற்றிருந்தனர்.
நீதிபதிகள் என்.ஸி. அமரதுங்க, பி.ஏ. ரட்நாயக்க, சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய குழாம் இவ்வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவந்திருந்தது.
ஆனால், கட்டாய பதிவு நடவடிக்கைகள் தொடர்வதாகவும் இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எனவும் த.தே.கூட்டமைப்பு எம்பிகள் குற்றம் சுமத்தினர்.
இந்நிலையில் தமது மனுமீதான விசாரணையை மார்ச் 15 அல்லது 16 அல்லது 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மனுதாரர்கள் நீதிமன்றை கோரியுள்ளனர்.
5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025