Suganthini Ratnam / 2011 மார்ச் 16 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு வருகின்றன.
க.பொ.த. (சா/த)இல் கணிதம், விஞ்ஞானம், தமிழ்மொழி மற்றும் ஏனைய ஒரு பாடம் உட்பட நான்கு பாடங்களில் திறமைச் சித்திகளுடன் இரு அமர்விற்கு மேற்படாது மொத்தமாக ஆறு பாடங்களில் சித்திபெற்றிருத்தல், க.பொ.த. (உ/த)இல் 2002ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஏதாவது பாடவிதானத்தில் ஒரே தரத்தில் மூன்று பாடங்களிலும் சித்திபெற்றிருத்தல் ஆகியன விண்ணப்பதாரிகளுக்கான தகைமைகளாகக் கொள்ளப்படுவதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 11.04. 2011 ஆகும். ஏற்கனவே 09.09.2010, 14.09.2010 ஆகிய திகதிகளில் யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் நடைபெற்ற நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாமெனவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025