Suganthini Ratnam / 2011 மார்ச் 16 , மு.ப. 08:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். குருநகர் இறங்குதுறையூடாக நேற்றிரவு கடற்றொழிலுக்குச் சென்ற 3 மீனவர்கள் இதுவரையில் கரை திரும்பவில்லையென அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
குருநகர் கடற்பரப்பிலிருந்து பாலைதீவு - மன்னார் வளைகுடா பகுதிகளில் வெளியிணைப்பு இயந்திரப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
காணாமல்போன மீனவர்களை தேடும் நடவடிக்கையில் அப்பகுதி மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இம்மீனவர்கள் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மன்னார் கரையோரப் பகுதியில் இம்மீனவர்கள் கரையொதுங்கியிருக்கலாமென அப்பகுதி மீனவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025