Suganthini Ratnam / 2011 மார்ச் 17 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாநகரசபைக்குட்பட்ட கரையோரப்பகுதியில் வாழும் மக்களின் குடிநீர் தேவையை கருத்திற்கொண்டு அவர்களுக்கு திருப்திகரமான முறையில் குடிநீர் வழங்குவதற்காக திருநெல்வேலி கோண்டாவில் பகுதிகளிலுள்ள நீர்ப்பம்பிகள் நவீனமயமாக்கப்படவுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகரசபையால் 30 இலட்சம் ரூபாய் செலவில் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு கரையோரப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
யாழ். நகரப்பகுதியில் வீடுகளுக்கான குடிநீர் பெறவிரும்பும் பொதுமக்கள் யாழ். மாநகரசபையின் நீர் வேலைப்பகுதியுடன் தொடர்புகொண்டு குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளமுடியுமெனவும் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025