2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காணாமல்போன குருநகர் மீனவர்கள் கண்டுபிடிப்பு

Suganthini Ratnam   / 2011 மார்ச் 17 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குருநகர் மீனவர்கள் மூவரும் நேற்று நள்ளிரவு மன்னார் முத்தரிப்புத்துறையில் கரையொதுங்கியுள்ள நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குருநகர் கடற்றொழில் அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஆர்.பிறேமன் தெரிவித்தார்.

அவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லையெனவும் அவர் கூறினார்.

இம்மீனவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக மன்னார் வளைகுடாப் பகுதியை நோக்கிச் சென்றபோது,  மன்னார் முத்தரிப்புத்துறை மீனவர்களினால் இவர்கள் காப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் அபிவிருத்திச் சங்கத் தலைவர் குறிப்பிட்டார்.

குருநகரைச் சேர்ந்த மீனவர்களான எஸ்.சுரேஸ் (வயது 26), வி.அந்தோணிமுத்து (வயது 56), ஆர்.டேல்சில் ராஜ் (வயது 32) ஆகியோரே காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஆவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X