Suganthini Ratnam / 2011 மார்ச் 17 , மு.ப. 07:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நேற்று வெளியான 2010 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ். மாவட்ட பாடசாலைகளில் வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ். இந்துக் கல்லூரி ஆகியன சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளன.
வேம்படி மகளிர் கல்லூரியில் 218 மாணவிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். இவர்களில் 11 பேர் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
08 ஏ சித்திகளை 40 பேரும் 07 ஏ சித்திகளை 26 பேரும் 06 ஏ சித்திகளை 30 பேரும் பெற்றுள்ளனர். ஏனையோர் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடைந்துள்ளனர்.
இதேவேளை, யாழ். இந்துக் கல்லூரியில் பரீட்சைக்கு தோற்றிய 219 மாணவர்களும்; சித்தியடைந்துள்ளனர்.
இவர்களில் 218 பேர் க.பொ.த உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவில் கல்வி கற்கத் தகுதி பெற்றுள்ளனர் என யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் வீ.கணேசராசா தெரிவித்துள்ளார்.
9 ஏ சித்திகளை 10 பேரும் 8 ஏ சித்திகளை 28 பேரும் 7 ஏ சித்திகளை 23 பேரும் 6 ஏ சித்திகளை 16 பேரும் பெற்றுள்ளனர்.
வேம்படி மகளிர் கல்லூரியில் 9 ஏ சித்திகளைப் பெற்ற மாணவிகளின் விபரம் வருமாறு:-
ஜெயந்தி சுந்தரம், பிரியந்தினி சத்தியசீலன், வினுசிகா பஞ்சலோகரஞ்சன், பிருந்தா நவநேசன், சம்யா சிவானந்தன், வைஷ்ணவி சக்திவேல், தாரணி கோகழிநாதன், தேனுகா யோகராஜா, பிரவீணா பரலோகராஜா, இந்துஜா சிவசுந்தரம், சோபிதா சிவேஸ்வரன்.
யாழ். இந்துக் கல்லூரியில் ஒன்பது ஏ சித்திகளை பெற்ற மாணவர்களின் விபரம் வருமாறு:-
ஆர்.ஜலுசன், கே.சுதாகர், வி.ஹரிகரன், எஸ்.கிருபாகரன், எ.ஆரமுதன், இ.பார்த்தீபன், எம்.பரசுராம், ஆர்.பிரணவன், கே.புவிவர்மன், ஆர்.சயிந்தன்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025