2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

உதயன் பத்திரிகை ஊழியர்களை மிரட்டிய கான்ஸ்டபிள் கைது

Super User   / 2011 மார்ச் 17 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஞான செந்தூரன்)

யாழ். உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நேற்று புதன்கிழமை மாலை புகுந்து ஊழியர்களை மிரட்டிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தப் போவதாக அவர் அச்சுறுத்தியதாக குற்றம் தெரிவிக்கப்படுகிறது.

உதயன் அலுவலகத்தில் பாதுகாப்புக்காக இருந்த பொலிஸார் குறித்து பொலிஸ் கான்ஸ்டபிளை விசாரித்ததையடுத்து, அவர் யாழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

அண்மையில் கான்ஸ்டபிளாக பொலிஸ் சேவையில் இணைந்த இ.பிரதீபன் என்பவரே கைது செய்யப்பட்டவர் ஆவார்.

அவர் சேவையிலிருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக யாழ் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் பத்மதேவா தெரிவித்துள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X