2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்.சுபாஸ் விடுதி உரிமையாளரிடம் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 மார்ச் 17 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கடந்த யுத்தகாலத்தின் போது இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்ட சுபாஸ் விடுதி இன்று வியாழக்கிழமை நண்பகல் அதன் உரிமையாளரான இந்திய பிரபல வர்த்தகர் எஸ்.ஹரிகரனிடம் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவினால் கையளிக்கப்பட்டதோடு விடுதி வழியால் செல்லும் விக்றோரியா  வீதியும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் யாழ். மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா இராணுவத்தின் பொறியியல் பிரிவு அதிகாரி கேணல் சில்வா, கேணல் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X