Suganthini Ratnam / 2011 மார்ச் 18 , மு.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
1995ஆம் ஆண்டு முதல் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்த விக்டோரியா வீதி பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டதையடுத்து, யாழ். நகரில் இனி எந்த உயர் பாதுகாப்பு வலயமும் இல்லையென யாழ். இராணுவக் கட்டளைத் தலைமையகம் நேற்றிரவு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
யாழ். அராலி, குருநகர், கொழும்புத்துறை, தனங்கிளப்பு மற்றும் பருத்தித்துறை ஆகிய பிரதேசங்களில் தம்வசமிருந்த அனைத்து இடங்களையும் இராணுவத்தினர் உரியவர்களிடம் கையளித்த நிலையில் அவற்றின் உரிமையாளர்கள் அங்கு குடியேறியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தெல்லிப்பழை உதவி அரசாங்க பிரிவின் கீழுள்ள குரும்பசிட்டி, வசாவிளான் தெற்கு, வலிகாமம் வடக்கு உதவி அரசாங்க பிரிவைச் சேர்ந்த இளவாலை வடக்கு, இளவாலை மேற்கு, வித்தகபுரம், வடமராட்சி வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த, குடத்தனை, குடத்தனை கரையூர், மணல்காடு, பொற்பதி, அம்பன், செம்பியன்பற்று வடக்கு, தெற்கு, மருதங்கேணி, வதிராயன், உடுத்துரை, ஆழியவளை ஆகிய இடங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் அங்கு மிக விரைவில் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாகவும் யாழ்ப்பாண இராணுவக் கட்டளைத் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
9 hours ago
21 Dec 2025
தமிழ்ச்செல்வன் Saturday, 19 March 2011 12:54 AM
அப்படி ஆயின் பலாலி,காங்கேசன்துறை என்பனவற்றை "அத்திபட்டியில்"சேர்த்து விட்டார்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025