Suganthini Ratnam / 2011 மார்ச் 18 , மு.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு தீ வைக்கப்போவதாக கூறி, ஊழியர்களை அச்சுறுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மாவட்ட நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் யாழ். மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே பொலிஸாரிடம், யாழ். மாவட்ட நீதிவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
அச்சுவேலி தெற்கு, சிவசக்தி கோயிலடியைச் சேர்ந்த செட்டி என அழைக்கப்படும் இரத்தினதாஸ் பிரதீபன் என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்றுமுன்தினம் புதன்கிழமை உதயன் அலுவலகத்திற்குள் புகுந்து அப்பத்திரிகை அலுவலகத்திற்கு தீ வைக்கப்போவதாக கூறி, ஊழியர்களையும் அச்சுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து உதயன் பத்திரிகை அலுவலகத்திற்கு உடனடியாக விரைந்த பொலிஸார், குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025