Suganthini Ratnam / 2011 மார்ச் 18 , மு.ப. 07:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.சுகந்தினி)
யாழ். போதனா வைத்தியசாலையில் 'லிப்ட் வசதிகள்' இல்லாமையால் நோயாளர்களும் பணியாளர்களும் பாரிய சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர், வைத்தியர் ஸ்ரீபவானந்தாராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது ஐந்து மாடிக் கட்டட நிர்மாண வேலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே 'லிப்ட் வசதிகள்' இல்லாதிருப்பதாக அவர் கூறினார்.
இவ்வைத்தியசாலையில் முன்னர் இரு மாடிகள் காணப்பட்டபோது 'லிப்ட் வசதி' இருந்தது. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டட நிர்மாண வேலைகள் காரணமாக ஏற்கெனவே இருந்த 'லிப்ட்' அகற்றப்பட்டுள்ளது.
தற்போது நான்கு மாடிகள் வரை கட்டட வேலைகள் பூர்த்தியாகியுள்ளது. இந்நிலையில் பழைய 'லிப்ட்' பயன்படுத்த முடியாத நிலைமை காணப்படுகிறது. புதிதாகவே 'லிப்ட் வசதிகள்' ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. இதற்கு 8.3 மில்லியன் நிதி தேவைப்படுகின்றது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு அறிவித்துள்ள நிலையில், இந்த வருட நிதியொதுக்கீட்டிலிருந்து நிதி ஒதுக்கி தருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
'லிப்ட் வசதிகள்' இல்லாமையால் நான்காவது மாடி வரை நோயாளர்களை தூக்கிச் செல்ல வேண்டியுள்ளதாகவும் இதனால் நோயாளர்களும் வைத்தியசாலை பணியாளர்களும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025